Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மழை

மழை

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று காலை மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும்.

    இதன் காரணமாக, 06.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    07.03.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதையும் படிங்க - Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் அன்று (07-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

    08.02.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதையும் படிங்க - Exclusive : ''சசிகலாவின் வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும்'' : ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பேட்டி

    09.03.2022, 10.03.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி