ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

65கிமீ வேகத்தில் காற்று.. நகர்ந்து வரும் மழை சக்கரம்.. எங்கெல்லாம் மழை? வானிலை அலெர்ட்!

65கிமீ வேகத்தில் காற்று.. நகர்ந்து வரும் மழை சக்கரம்.. எங்கெல்லாம் மழை? வானிலை அலெர்ட்!

மழை

மழை

நாளை காலை தாழ்வு மண்டலம் குமரி கடலுக்கு வரும் என வானிலை மையம் கூறியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்ககடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் வலு குறைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரி கடல் பகுதியை நெருங்க வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் கன்னியாகுமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விழாவுக்கு வராத அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள்.. நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி!

 

இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.. முக்கிய விவரம் சொன்ன அமைச்சர்!

 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் வங்ககடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் வலு குறைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை தாழ்வு மண்டலம் குமரி கடலுக்கு வரும் என வானிலை மையம் கூறியுள்ளது

First published: