தமிழகத்தில் 16,768 பேருந்துக்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனையில் ஈடுபட்டார் அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். என்று கூறினார். மாதவரம் புதிய பேருந்து நிலையம் , கே.கே. நகர் மா.போ.க பேருந்து நிலையம்,
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ), தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அதே போல பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை, நாள் தோறும் இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் செயல்பட்டு வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும் 2 தனிப்படை அமைப்பு: கேரளா, குற்றாலத்துக்கு விரைகிறது
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: சிக்கிய சிங்க முகமூடி மனிதன்.. சுடுகாட்டில் மீட்கப்பட்ட நகைகள் - நடந்தது என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.