தமிழக சட்டப்பேரவை நிகழ்வு, ஆளுநருடன் பஞ்சாயத்து என இந்த வாரம் தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்க.. சீரியஸாவே போய்க்கிட்டிருந்தா எப்படின்னு கலகலப்பான சம்பவம் ஒன்னு நடந்துருக்கு.
சட்டமன்றத்துல இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டு மைக்கை நீட்ட ஆள விடுங்க சாமின்னு.. கார்ல ஏறப்போயிருக்கார் எடப்பாடியார்.. பார்த்தா, அது சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கார்... பக்கத்துல இருந்த போலீஸ்காரர் இது உங்க வண்டி இல்லன்னு சொல்ல.. ஓ.. சாரின்னு வழக்கமான ட்ரேட் மார்க் புன்னகையோடு அங்கிருந்து புறப்பட்டார் எடப்பாடியார்.
ரெண்டு பேர் காரும் ஒரே மாதிரி இருக்குறதால் இந்த கன்பியூசன் வந்திருக்கு.. ரெண்டு நாளைக்கு அப்புறம் சட்டப்பேரவை முடிந்து கேஷ்வலா பேசிக்கிட்டு வந்த உதயநிதி ஸ்டாலின், அட நீ வேறப்பா நானே 3 நாளைக்கு முன்னாடி எடப்பாடியார் கார்ல ஏறப்போனேன்.. கார்ல ஜெயலலிதா படம் இருக்கவும் சுதாரிச்சுட்டேன்னு உதயநிதி தனது நண்பரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்கிட்ட சொல்லியிருக்கார்.
இப்படியே போனா பக்கத்துல யார் இருக்கான்னு தெரியாம பேசிக்கிட்டு போக வேண்டியதுதான்னு அன்பில் மகேஷ் நச் கமெண்ட் அடித்துள்ளார். இதற்கு அடுத்தநாள் பேரவையில் பேசுன உதயநிதி, ஓபிஎஸ், ஈபிஎஸ் ரெண்டு பேருக்கும் நன்றி.. போன தடவை நான் பேசும்போது நீங்க வெளிநடப்பு செஞ்சுட்டீங்க.. நேற்று வெளிநடப்பு பண்ணீட்டீங்க. இன்னைக்கு நான் பேசுறேன் நீங்க வெளிநடப்பு செய்வீங்கன்னு நினைச்சேன்.. உள்ள இருக்கீங்க அதுக்குதான் நன்றி.. நீங்க வெளிநடப்பு செஞ்சாலும் என் கார்ல தான் போனும்.. எதிர்க்கட்சி தலைவர் தாராளமா அடுத்தமுறை என் காரை எடுத்துக்கிட்டு போங்க. ஆனா, காரை எடுத்துக்கிட்டு கமலாலயம் மட்டும் போகாதீங்கன்னு கமெண்ட் அடிக்க.. இந்த புள்ள என்னமா பேசுதுன்னு சீனியர்களிடம் இருந்து சிரிப்பலை வந்தது..
எங்க கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு மட்டும்தான் போகும் அப்படின்னு பேரவையில் உதயநிதி கமெண்ட்-க்கு ரியாக்ட் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.. எப்பவும் ட்ரெண்டிங்கிலே இருக்கும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை , உதயநிதி கார் கமலாலயம் வர அருகதையில்லை.. அப்படியே வர முயற்சித்தாலும் கார் ஸ்டார்ட் ஆகாதுன்னு ஒருவழியாக கார் டாப்பிக்குக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Anbil Mahesh Poyyamozhi, Annamalai, BJP, DMK, Edappadi Palanisami, Tamil News, TamilNadu Politics, TN Assembly, Udhayanidhi Stalin