Home /News /tamil-nadu /

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை... தமிழகத்தின் எதிர்வினை

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை... தமிழகத்தின் எதிர்வினை

புதிய கல்வி கொளை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

புதிய கல்வி கொளை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

  • News18
  • Last Updated :
    இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவியது.

    2019-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசின் வரைவு அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

    மேலும், திய கல்விக்கொள்கை வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் களத்தில் இறங்கி பேசத் தொடங்கினர்.

    இந்தக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா விமர்சித்துப் பேசியபோது, அதனை அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டித்துப் பேசினார். இந்த ஆண்டு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி