ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உஷார் மக்களே! உங்க பணம் இப்படியும் அபேஸ் ஆகும்! தமிழக போலீசாரின் முக்கிய அட்வைஸ்!

உஷார் மக்களே! உங்க பணம் இப்படியும் அபேஸ் ஆகும்! தமிழக போலீசாரின் முக்கிய அட்வைஸ்!

காவல்துறை வெளியிட்ட மீம்

காவல்துறை வெளியிட்ட மீம்

முதலில் உங்களிடம் பணம் கேட்பது உங்கள் பாஸ் தானா? என உறுதி செய்ய வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பாஸ் ஸ்கேமிற்கு பலியாகாதீர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை பகிர்ந்துள்ள மீம்ஸ் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  சமீப காலமாக ஆன்லைன் மூலம் பலவகை மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு பலர் பலியாகி வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன் ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புதிய ஏமாற்று வேலை நடைபெற்று வருகிறது.

  அதாவது இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், உங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள். உங்கள் இன்பாக்ஸில் வந்து, எனது கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என எதாவது சாக்கு சொல்லி பணம் கேட்பார்கள். ஆனால் அது உங்கள் பாஸ் அல்ல. அவர் பெயரில் நடக்கும் மோசடி. இதுபோல உங்களுடம் வேலை செய்யும் பலருக்கும் இந்த குறுச்செய்தியை அனுப்பியிருப்பார்கள்.

  குறைந்தது பத்தில் மூன்று பேராவது அதை நம்பி மோசடிக்காரகளுக்கு பணம் அனுப்பிவிடுவார்கள். இது போல் உங்களை யாராவது தொடர்பு கொண்டால், முதலில் உங்களிடம் பணம் கேட்பது உங்கள் பாஸ் தானா? என உறுதி செய்ய வேண்டும். உங்கள் பாஸிற்கு தொடர்புகொண்டு அதை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்.

  இதையும் வாசிக்க: ''பிரதமர் மோடியின் உத்தரவு.. 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருவார்கள்'' - அண்ணாமலை பேச்சு

  இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஏற்கனவே விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இது போன்ற மோசடிகளுக்கு பலியாக வேண்டாம் என காவல்துறையும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து மீம்ஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

  மீம்ஸ் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த பதிவை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Memes, Tamilnadu police