ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டை விட்டுள்ளது - அண்ணாமலை மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டை விட்டுள்ளது - அண்ணாமலை மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

BJP Annamalai | ஜூன் 19ம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் தமிழக காவல்துறையின் உளவுத்துறை கோட்டை விட்டுள்ளதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டைவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்திருந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திருந்த தமிழக காவல்துறை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும், வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு எனவும் விளக்கம் அளித்திருந்தது.

    மேலும் எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்திருந்தது.

    இதையும் படிங்க : தமிழக காவல்துறையா...? அறிவாலயத்தை காக்கும் துறையா..? அண்ணாமலை கேள்வி

    இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், கடந்த 23ம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. அன்று மதியம் இதைப்பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மேலும் இந்த வெடி விபத்தில் இருக்கும் மர்மத்தை காவல்துறை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

    23ம் தேதி இரவு நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை.  இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன். ஆனால் இன்றுடன் இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

    6 தனிப்படை அமைத்து விசாரித்து கொண்ருக்கிறோம் என சொல்லும் காவல்துறை அடுத்த கட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?  அக்டோபர் 21ம் தேதி ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

    இதையும் படிங்க : ஆலய பிரவேசத்தை அமைதியாக நடத்தியவர் முத்துராமலிங்க தேவர் - எச்.ராஜா புகழாரம்!

    இறந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா? அக்டோபர் 23ம் தேதி முன்னரே ஜமேஷா முபின் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபின் 89ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூன் 19ம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.

    அண்ணாமலை வெளியிட்ட தனிப்பிரிவு அறிக்கை

    கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Published by:Karthi K
    First published:

    Tags: Annamalai, BJP, Chennai