ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் - அண்ணாமலை மீது புகார்களை அடுக்கிய காவல்துறை!

அவதூறு பரப்பும் பாஜக மாநில தலைவர் - அண்ணாமலை மீது புகார்களை அடுக்கிய காவல்துறை!

மாதிரி படம்

மாதிரி படம்

உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழ்நாடு காவல்துறை குற்றச்சாட்டியுள்ளது.

  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக காவல்துறை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும் வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு என விளக்கம் அளித்துள்ளது. எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

  ஆனால் இந்த வழக்கில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை கார் வெடிப்பு நிகழ்வை NIA விசாரிக்க பரிந்துரை செய்தார் என்றும் இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் NIA-விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே NIA-விடம் ஒப்படைக்கப்பட்டன காவல்துறை கூறியுள்ளது.

  இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி!

  தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது மாநில அரசாங்கங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், குண்டு வெடிப்பு நடக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த அண்ணாமலை முயல்வதாக குற்றச்சாட்டியுள்ளது.

  ஆனால் கோவை மாநகரைப் பற்றி எந்த தகவலும் சுற்றறிக்கையில் இல்லை. இது போன்ற உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Annamalai, Coimbatore, Tamilnadu police