மிகவும் பின் தங்கிய பிற சமூகத்தினருக்கு அநீதி: வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மிகவும் பின் தங்கிய பிற சமூகத்தினருக்கு அநீதி: வன்னியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்.

மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்துள்ளது, சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும்.

  • Share this:
    வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை ரத்து செய் யக்கோரி அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பினர் சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலு வலகம் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இது குறித்து அனைத்து மறவர் நலக் கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார் கூறியதாவது: மிகவும் பின்தங்கியோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்துள்ளது, சீர்மரபினர் மற்றும் பிற மிகவும் பின்தங்கிய சமூகத்தினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டும்.

    சீர்மரபினர் சமூகத்துக்கு டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், மறவர் சீரமைப்பு வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மறவர் நலக்கூட்டமைப்புத் தலை வர் சண்முகசாமி, துணைத் தலை வர் மயில்மணி பாண்டியன், மற வர் அறக்கட்டளை முருகேசன், பொதுச்செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதற்கு முன்னர் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை விமர்சித்துக் கூறும்போது, “உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல் திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழுக் கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் தற்போது தமிழகத்தில் கூட்டாக சதித் திட்டம் தீட்டி, தேர்தல் அரசியலில் சாதிக் காய்களை நகர்த்தி வருகின்றன.

    அதாவது, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பிடியில் கட்டுண்டு அவர்களின் இழுப்புக்கேற்ப ஆட்டம் போடும் அதிமுக அரசு, தமிழகத்தில் உள் ஒதுக்கீடு என்னும் பெயரால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள விளிம்புநிலை சமூகங்களைக் கூறுபோட்டுச் சட்டம் ஒன்றை இயற்றியிருப்பது அதன் வெளிப்பாடுதான்.

    'எம்பிசி' சமூகங்களின் இட ஒதுக்கீட்டு நலன்களை நீர்த்துப்போகச் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை வன்னியர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அறியாதவர்கள் அல்ல! எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அவர்கள் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியினருக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.


    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, உள் ஒதுக்கீடு சட்டமசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. அதாவது, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, அக்னிகுல சத்ரியா ஆகிய 7 பிரிவுகளை உள்ளடக்கி 'வன்னியகுல சத்ரியா' என்ற பெயரில் அச்சமூகத்தினருக்கு 10.5 சதவீதமும்; மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளான பரவர், மீனவர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 25 சாதிகள் மற்றும் சீர்மரபினர் எனப் பட்டியலிடப்பட்டுள்ள ஆப்பநாட்டு மறவர், கள்ளர், பிரன்மலைக்கள்ளர் முதலிய 68 சாதிகள் உட்பட ஆக மொத்தம் 93 சாதிகளுக்கு 7 சதவீதமும்; எஞ்சியுள்ள இசைவேளாளர் உள்ளிட்ட 26 சாதிகளுக்கு 2.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர்.

    இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்கிறபோது, உள் ஒதுக்கீடு என்பதும் சமூக நீதியின் மிகவும் குறிப்பான, நுட்பமான பரிமாணமே ஆகும். அதில், எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாமக, அதிமுக, மற்றும் பாஜக ஆகியவை எந்த அடிப்படையில் இதனை அணுகுகின்றன என்பதே முதன்மையானது.

    ஒட்டுமொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பாஜகவின் சனாதன சதி திட்டத்தைத்தான் அதிமுக அரசும் பாமகவும் இப்போது நிறைவேற்றி உள்ளன.

    இதனை நன்குணர்ந்துள்ள வன்னியர் சமூக மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தத் தேர்தலில் பாஜக - அதிமுக - பாமக கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்". என்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: