• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும் சசிகலாவை மக்கள் நம்ப மாட்டார்கள்: ஜெயக்குமார்!

ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும் சசிகலாவை மக்கள் நம்ப மாட்டார்கள்: ஜெயக்குமார்!

ஜெயகுமார்

ஜெயகுமார்

அதிமுக  கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு  எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.

  • Share this:
    ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும்  சசிகலாவை மக்கள்  நம்ப மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ராமச்சந்திர ஆதித்தனார் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,   அதிமுகவில் சசிகலாவுக்கு ஒருபோதும் இடம் இல்லை. அமமுகவில் வேண்டுமானால் டிடிவி  தினகரன் இடம் கொடுக்கலாம்.  இவர்கள் நிராகரிக்கப்பட்ட சக்திகள். கட்சியை கைப்பற்றுவது பகல் கனவாக தான் இருக்கும் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், அதிமுக  கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு  எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று கூறினார்.

    ஜெயலலிதா சமாதியில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆஸ்கர் வழங்கும் அளவு நடித்தாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள், எப்படி பல ஆயிரம் பேர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்களோ அதை போலதான் இவரையும் மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி


    மேலும், தன்னை சிறந்த முதல்வர் என முதல்வரே தான் கூறிக் கொள்கிறார். யார் அவருக்கு  சிறந்த முதல்வர் என்று விருது கொடுத்தார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. ஆளுநர் கூப்பிட்டு சொன்ன பிறகு தான் முதல்வர் கோயில் திறக்க உத்தரவிடுகிறார். கள நிலவரம் ஆளுநருக்கு தெரிகிறது. அவர் வழிகாட்டுதல் படி தான் முதல்வர் செயல்படுகிறார் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சசிகலா வீடு முன் அதிமுக கொடியுடன் திரண்ட தொண்டர்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: