ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அச்சுறுத்தும் ஒமைக்ரான்.. ஊரடங்கை தடுக்க கொரோனா ஊசி போடுங்க - ராமதாஸ்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்.. ஊரடங்கை தடுக்க கொரோனா ஊசி போடுங்க - ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ்

ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம் அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இது அதி தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்குள் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.  அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

Also Read: ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சென்னையில் 275 படுக்கைகள் தயார்

ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Corona spread, Corona Symptoms, Corona Vaccine, CoronaVirus, Covid-19, Covid-19 vaccine, Omicron, PMK, Ramadoss, Tamil News