TAMILNADU PANCHAYAT PRESIDENTS ARE PROTEST IN CHENNAI SRS
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம்
போராட்டம்
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காதால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததால் கிராமங்களில் அடிப்படை பணிகள் முடங்கி உள்ளதாகவும், உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை பணிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் அத்தியவாசிய நிதிக்குழு மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபடாதால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவிட்டு இருப்பதாகவும், நிலுவையில் உள்ள தொகையை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
கொரோனா தொற்று காரணத்தால் கூட்டபடாத கிராம சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசு திட்ட பணிகளை, பேக்கேஜ் முறை இல்லாமல் , ஊராட்சி டெண்டர் மூலம் ஊராட்சி தலைவர்கள் மூலமாக பணிகளை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊராட்சி மன்ற தலைவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.