நலத்திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத தமிழக அரசு! சி.ஏ.ஜி அறிக்கை

தமிழக அரசின் 37 துறைகளுக்கு, பத்து லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் நிதியானது, சட்டப்பேரவை அறிவிப்பின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நலத்திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத தமிழக அரசு! சி.ஏ.ஜி அறிக்கை
தமிழக சட்டசபை
  • News18
  • Last Updated: August 4, 2019, 8:52 PM IST
  • Share this:
கடந்த ஐந்தாண்டுகளில், சட்டப்பேரவையில் ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு பயன்படுத்தவில்லை சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செலவின விவரங்கள் தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது, இதில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசின் 37 துறைகளுக்கு, பத்து லட்சத்து 12 ஆயிரத்து 893 கோடி ரூபாய் நிதியானது, சட்டப்பேரவை அறிவிப்பின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில், எட்டு லட்சத்து 91 ஆயிரத்து 821 கோடி ரூபாயை மட்டுமே அரசு செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்த தவறியுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 2017-18 நிதியாண்டில், 28 ஆயிரத்து 29 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு செலவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 24 ஆயிரத்து 502 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.


குறிப்பாக, 2017-18 நிதியாண்டில், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆயிரத்து 190 கோடி ரூபாயையும், இடைநிலைக் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட 437 கோடி ரூபாயையும் தமிழக அரசு பயன்படுத்தவில்லை. இதேபோல், நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாயிரத்து 44 கோடி ரூபாயையும் பயன்படுத்தப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போயிருப்பதாகவும், தவறான நிதிநிலை திட்டமிடலால் தமிழக அரசு நிதியை பயன்படுத்த தவறியிருப்பதாகவும் மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:
First published: August 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading