• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் ஒரேநாளில் 26 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!

தமிழகத்தில் ஒரேநாளில் 26 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை!

மெகா தடுப்பூசி முகாம்

மெகா தடுப்பூசி முகாம்

20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதையும் கடந்து இன்று ஒரேநாளில் 26 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

  • Share this:
    தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,  அதனையும் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றின் 2வது அலை சற்று குறைந்துள்ள நிலையில், மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என்பதால் தடுப்பூசி செலுத்துவதை விரிவுப்படுத்தும்படியும், விரைவுபடுத்துப்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற இந்த முகாமில்20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

    அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் அதனை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. ஒருசில இடங்களில் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இதையும் படிக்க: தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: ஊராட்சி மன்ற தலைவரின் அறிவிப்பால் குவிந்த மக்கள்!


    20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதையும் கடந்து இன்று ஒரேநாளில் 26 லட்சம் பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  அரசின் முயற்சி மற்றும் பொதுமக்களின்பங்களிப்பின் மூலம் இந்த சாதனை சாத்தியமானதாக தெரிவித்தார். இதற்கு முன்பு 6.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே தமிழகத்தில் அதிகபட்சம் ஆகும்.  ஆனால், இன்று ஒரே நாளில் அதை விட சுமார் 4 மடங்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: