முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாடு மாதிரி பள்ளிகள்: நுழைவுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு.. தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு மாதிரி பள்ளிகள்: நுழைவுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு.. தேதி அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

அண்மையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றபோது அங்கு செயல்படும் மாதிரிப் பள்ளிகளை பார்வையிட்டு திரும்பினார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதுபோன்ற மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகளை தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவ. மாணவியரை தெரிவு செய்து சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மேலும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே மாதிரி பள்ளிகளில் அனுமதிக்கப்படவுள்ளனர். நுழைவுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

First published:

Tags: Entrance Exam, Government school, School education