பனியன் நகரம் என அழைக்கப்படும் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி வீடியோக்களும் வெளியாகின.
இந்த நிலையில் தவறான உள்நோக்கத்தோடு விஷம பிரசாரத்தை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ள பெருந்தொழில், சிறு தொழில் நிறுவனங்களில் பல மாநில தொழிலாளர்களும் அமைதியான சூழலில் பணியாற்றுகின்றனர். மாநில வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.
மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் பெருமளவில் ஈடுபட்டு அத்துறை வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அனைத்து நிறுவனங்களிலும் தமிழக அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது தொழிலாளர் நலத் துறை மூலம் உறுதி செய்யப்படுகிறது.
விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழக மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழக அரசும் வெளிமாநில உடலுழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்திருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகின்றனர் என அமைச்சர் கணேசன் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/aspasRyX7N
— C.V.Ganesan (@cvganesan1) March 3, 2023
இந்த சூழலில், தமிழகத்தில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மாறான, தவறான உள்நோக்கத்தோடு, விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்படுகிறது. இதில் உண்மை இல்லை என்றும், தொழில் அமைதி, சமூக அமைதிக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாக செய்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி, அனைத்து மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamilnadu, Tamilnadu government, Tirupur