ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

”கடம்பூர் ராஜூவா” அவர் யார் என்றே எனக்கு தெரியாது ! செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் வைத்த டிவிஸ்ட்!!

”கடம்பூர் ராஜூவா” அவர் யார் என்றே எனக்கு தெரியாது ! செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் வைத்த டிவிஸ்ட்!!

அமைச்சர் துரைமுருகன் மாதிரி படம்

அமைச்சர் துரைமுருகன் மாதிரி படம்

தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேர்த்து வைக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேலணையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் துரைமுருகன்,முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும் என்றும்  காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே இருந்த மூத்த பொறியாளர்களை கலந்து ஆலோசித்தபோது தண்ணீரை சேமிக்க வாய்ப்பில்லை என்றார்கள் என கூறினார்.

தற்போது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இறந்தவர்களையே பிழைக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் வெள்ள நீரையா சேமிக்க முடியாது. வெள்ளநீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

சேலம் மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம்  கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை என்றும்  காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

Also Read: ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி கொல்லப்பட்டதை அறிந்து நொறுங்கிப்போனேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை எனவும் துரைமுருகன் குற்றச்சாட்டியுள்ளார்.

முதலமைச்சரை சில அமைச்சர்கள் தூங்கி விழிக்க விடாமல் செய்கிறார்களே.. அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?" என்று கேட்டதற்கு, அது குறித்து தான் அவரே சொல்லிவிட்டாரே மேற்கொண்டு நான் என்ன சொல்வது? என்று பதில் அளித்தார். மேலும், வரும் லோக்சபா தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடுமா? என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு, எனக்கு அவர் யார் என்றே தெரியாது" என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

First published:

Tags: Durai murugan, Kadambur raju, Trichy