ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

66 குழந்தைகளின் உயிரை பறித்த மைதன் நிறுவன மருந்து... தமிழகத்தில் விற்பனையா என ஆய்வு

66 குழந்தைகளின் உயிரை பறித்த மைதன் நிறுவன மருந்து... தமிழகத்தில் விற்பனையா என ஆய்வு

இருமல் மருந்து

இருமல் மருந்து

கர்நாடகாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளில் இந்த பொருள் உள்ளதா என கண்காணிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காம்பியா நாட்டில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தமிழகத்தில் அந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறதா என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வு நடத்தி வருகிறது.

  மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். ஹரியானாவில் உள்ள மைதன் பார்மக்யூட்டிக்கல்ஸ் (Maiden Pharmaceuticals) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அந்த குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

  இந்த மருந்தில் அளவுக்கு அதிகமாக diethylene gycol என்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த மருந்து புழக்கத்தில் இருப்பதை தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், கர்நாடகாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளில் இந்த பொருள் உள்ளதா என கண்காணிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

  ALSO READ | சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து வந்து நரபலி.. பெண்களின் உடல்களை வெட்டி சாப்பிட்ட கொடூரம்..!

  அந்த வகையில், அந்த நிறுவனத்தின் மருந்து விற்கப்படுகிறதா என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை கள ஆய்வு நடத்துகிறது.அதில் அந்த நிறுவனத்தின் மருந்து எங்கும் இல்லை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கள ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Medicine, Tamilnadu