முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆஸ்திரேலியாவில் போலீசார் துப்பாக்கிச் சூடு.. பலியான தமிழர்... ரயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்..!

ஆஸ்திரேலியாவில் போலீசார் துப்பாக்கிச் சூடு.. பலியான தமிழர்... ரயில் நிலையத்தில் பரபரப்பு சம்பவம்..!

ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட ரகமத்துல்லா

ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட ரகமத்துல்லா

ஆஸ்திரேலியாவில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaAustralia

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது ரகமத்துல்லா சையது அகமது. 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்ற இவர் அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று ரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான தூய்மை தொழிலாளரை முகமது ரகமத்துல்லா சையது அகமது கத்தியால் குத்தி உள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலிருந்து இரண்டு போலீசார் அவரை நெருங்கினர். அப்போது அவர்களையும் அகமது கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் போலீசார் அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் நெஞ்சில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ரகமத்துல்லா உயிரிழந்தார். இந்த செய்தியை சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டுள்ளது.

First published:

Tags: Australia, Crime News, Gun shoot