Home /News /tamil-nadu /

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன்? மு.க. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன்? மு.க. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி

டாஸ்மாக்

டாஸ்மாக்

நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் (Tasmac) கடைகளையும், மதுபானக்கூடங்களையும்(Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் நாள் முதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  வார நாட்களில்  இரவு ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.

    நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள போதிலும் , டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தனியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அன்றைய தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. வார நாட்களில் இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதாலும்  இரவு 10 மணி வரைதான் டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருவதாலும், எந்த தடையுமின்றி மது விற்பனை நடக்கும் என தெரிகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்  பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதலமைச்சர் திரு.ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?



    நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும்(Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது.தேவைப்பட்டால் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் திரு.ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அரசு பணியாளர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் கட்டாயம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona impact, Tasmac, TTV Dinakaran

    அடுத்த செய்தி