Home /News /tamil-nadu /

முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ஜோர்... புத்தாண்டு விற்பனையை தாண்டியது

முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ஜோர்... புத்தாண்டு விற்பனையை தாண்டியது

டாஸ்மாக்

டாஸ்மாக்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 147 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றது. நேற்றைய தினம் அதனைவிட 70 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது

    தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் டாஸ்மாக்கில் சுமார் ரூ.218 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது புத்தாண்டு விற்பனையை விட அதிகமாகும்.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் காரணமாக இன்றுஅத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    இன்று டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மது பிரியர்கள் நேற்றே மதுபானங்களை வாங்க டாஸ்மாக்கில் அதிகம் குவிந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.217.96  கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.  அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும் திருச்சி மண்டலத்தில் ரூ.42.59 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 40.85 கோடிக்கும் மதுரை மண்டபத்தில் 43.20 கோடிக்கும் கோவை மண்டலத்தில் 41.28 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    இது புத்தாண்டு விற்பனையை விட  அதிகமாகும். புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 147 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. தற்போது அதனைவிட 70 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: திருச்சி என்.ஐ.டி.யில் பங்களாதேஷ் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

    Published by:Murugesh M
    First published:

    Tags: Lockdown, Tamilnadu, Tasmac

    அடுத்த செய்தி