Home /News /tamil-nadu /

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு... இறைச்சி கடைகள் திறந்திருக்குமா?

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு... இறைச்சி கடைகள் திறந்திருக்குமா?

இறைச்சி கடைகள்

இறைச்சி கடைகள்

முந்தைய ஊடங்குகளின்போது ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்காக அதிகளவில் பொதுமக்கள் கூடினர். இதனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோடு இறைச்சி கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. 

    தமிழகத்தில் நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் இறைச்சி கடைகள் திறப்பு தொடர்பாக சில அறிவுரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரொனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வார நாட்களில் இரவு ஊரடங்கும் (இரவு 10 மணி முதல்  காலை 5 மணி வரை) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.   அதேவேளையில் பொது போக்குவரத்தும், மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உணவு டெலிவரியில் ஈடுபடும்  ஆன்லைன் நிறுவனங்கள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஊடங்குகளின்போது ஞாயிற்றுக்கிழமை இறைச்சி வாங்குவதற்காக அதிகளவில் பொதுமக்கள் கூடினர். இதனால் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டதோடு இறைச்சி கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதிவரை விடுமுறை: தமிழக அரசு


    இந்நிலையில், இந்த முறை ஞாயிறு முழு ஊரடங்கின்போது மீன், காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும்,மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் படிக்க: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாதது ஏன்? மு.க. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Lockdown, Night Curfew

    அடுத்த செய்தி