Home /News /tamil-nadu /

நகர்ப்புற தேர்தலும், கொரோனா கட்டுப்பாடுகளும்... தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

நகர்ப்புற தேர்தலும், கொரோனா கட்டுப்பாடுகளும்... தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. ஒரே கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் 19-ம்தேதி நடைபெறவுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், கொரோனா பரவலும் தற்போது வரை கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கொரோனா காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. ஒரே கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் 19-ம்தேதி நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு... பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு

    இந்நிலையில் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு முறைகள் குறித்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

    கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவற்றுடன் ஆலோசித்து உள்ளாட்சித் தேர்தலின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளன.

    மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட 25.1.2022 அன்று கூடுதல் அறிவுரைகளையும் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கீழ்க்கண்ட 13 பொருட்களை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கிட தக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை - முழு விவரம்

    வெப்பமானி (Therimometer), கை சுத்திகரிப்பான் (hand sanitizer), முகக்கவசம் (fuce shield), முகமுடி (face mask), கை உறைகள் (rubber gloves), பிபிஇ கிட்ஸ் (PPE kits), டி-கட் பேக்ஸ் (D-cut bags), வாக்காளர்களுக்கான கையுறைகள் (polyethylene hand gloves), பிரவுன் டேப் (brown fape), பஞ்சு (cartons) மற்றும் குப்பை வாளிகள் (dustbins/buckets) போன்றவை மாவட்ட அளவில் கொள்முதல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி