அதிமுகவை வீழ்த்திய கணவர்... பாஜகவிடம் தோல்வியடைந்த மனைவி...! திருச்சியில் சுவாரஸ்ய தேர்தல் முடிவு

TamilNadu Local Body Poll Results |

அதிமுகவை வீழ்த்திய கணவர்... பாஜகவிடம் தோல்வியடைந்த மனைவி...! திருச்சியில் சுவாரஸ்ய தேர்தல் முடிவு
News18
  • News18
  • Last Updated: January 2, 2020, 4:03 PM IST
  • Share this:
நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கணவர், அதிமுக எம்.எல்.ஏவின் கணவரை வீழ்த்திய நிலையில், மனைவி பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தின் முதலாவது வார்டு மற்றும் நான்காவது வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலாவது வார்டில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குமார் 1859 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரான கீதா ஸ்ரீதரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். கீதா ஸ்ரீதர் 1727 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.


சுவாரஸ்யம் என்னவென்றால் கீதா ஸ்ரீதரின், கணவர் ஸ்ரீதர் நான்காவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு 1307 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.

அதிமுகவை கணவர் வென்றுள்ள நிலையில், மனைவி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவிடம் தோல்வியடைந்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நேரலையாக பார்க்க... 
First published: January 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading