31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு...!

TN LocalBody Election |

31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு...!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 2, 2019, 12:16 PM IST
  • Share this:
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. வரும் 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்கும்.
ஊராட்சி வார்டு,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடக்கும்.

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வெள்ளை நிறத்திலும் கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நகராட்சிக்கான தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி பழங்குடியினருக்கும், நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநல்வேலி ஆகிய மாவட்டங்கள் ஆதி திராவிட பெண்களுக்கும், தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிரிஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நாகை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எதுவும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading