தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உதயமாகின. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
Also Read: ஸ்டாலின் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது - எச்.ராஜா விமர்சனம்
இந்த நிலையில் விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு விரைந்து தேர்தல் நடந்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியானது.
Also Read: சினிமா பாணியில் பள்ளி ஆசிரியர் கடத்தல்.. மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர்
மாவட்ட வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Election, Local Body Election 2019, Tamilnadu