ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு வரும் 27 மற்றும் 30-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வரும் டிசம்பர் 27 , 30 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் என்ற நிலையில், பல இடங்களில் வேட்புமனு வாபஸ் சம்பவங்களும் நடந்தது.
இறுதியாக களத்தில் உள்ள வேட்பாளர்கள் பட்டியலை கீழே உள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதள லிங்க்-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்...
https://tnsec.tn.nic.in/nomination/project_main/nomination_view/
மாவட்ட வாரியாக இந்த இணையதளத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் தகவல்கள் அடங்கியிருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.