ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் சூதாட்டத்தால் 25 பேர் தற்கொலை.. ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள் - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

ஆன்லைன் சூதாட்டத்தால் 25 பேர் தற்கொலை.. ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள் - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தி உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், அவசர சட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலாவதியானது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மசோதா குறித்து ஆளுநரிடம் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வங்கி கணக்கில் பொங்கல் பரிசு.. தமிழக அரசு திட்டம்..? ரேஷன் கார்டுதாரர்களுக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ண நடவடிக்கை!

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளித்தால், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

First published:

Tags: Online rummy, RN Ravi, Tamil Nadu Governor, Tamilnadu