ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்ப்னு எங்களுக்கு தெரியும்” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

“நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்ப்னு எங்களுக்கு தெரியும்” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்!

ஆர்.என்.ரவி, சு.வெங்கடேசன்

ஆர்.என்.ரவி, சு.வெங்கடேசன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் ஆளுநர் விருப்பம் ஈடேறாது - சு.வெ

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரம்பர் ஸ்டாப் ஆக்கும் ஆளுநர் ரவியின் முயற்சி பலிக்காது எனவும் அவர் யாருடைய ரப்பர் ஸ்டாம்ப் என்று தெரியும் எனவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியி இருப்பவர் தெற்கே வருவதும் தெற்கிலிருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக நடந்து வருவது தான்” என குறிப்பிட்டார். மேலும் ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகும் திராவிட இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டதையே பின்பற்றி வருவது தவறு எனவும் தெரிவித்தார்.

    இதேப்போல் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் லோக் ஆயுக்தா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “அரசின் மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு காரணம் இருக்கும். ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. லோக் ஆயுக்தா போன்ற அமைப்பு தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்வது ஆளுநர் உள்பட அரசியலமைப்பு அலுவலகங்களின் கடமை” என்று கூறினார்.

    தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு - திருமாவளவன் பேச்சு! 

    இதற்கு பதிலளித்து பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆளுநரின் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது எனவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் ஆளுநர் விருப்பம் ஈடேறாது எனவும் தெரிவித்தார்.

    மேலும், “திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர் ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும்” என குறிப்பிட்டிருந்தார்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: RN Ravi, Su venkatesan