LIVE: ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

TN Govt Staffs - Jacto Geo Strike Live Updates

  • | January 30, 2019, 18:02 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 YEARS AGO

    AUTO-REFRESH

    17:43 (IST)

    அரசு தரப்பில் யாரும் எங்களை அழைத்து பேசவில்லை. முதல்வர், அனைத்துக் கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டம் வாபஸ்

    - ஜாக்டோ-ஜியோ

    17:42 (IST)

    முதல்வர் எங்களை அழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திறும்பப்பெற வேண்டும் - ஜாக்டோ-ஜியோ

    16:46 (IST)

    பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது - தலைமைச்செயலக பணியாளர் சங்கம்

    11:54 (IST)

    போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து இன்று மாலை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் உயர்மட்ட குழு கூட்டம் மாலை 3.30மணிக்கு நடைபெறுகிறது.

    10:0 (IST)

    #BREAKING பணிக்குத் திரும்ப ஆசிரியர்களுக்கு இனி அவகாசம் வழங்கப்படாது - தமிழக அரசு


    9:3 (IST)

    அவகாசம் கொடுத்தும் பணிக்கு திரும்பாமல் இருக்கும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:18 (IST)

    திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் - தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ​

    18:17 (IST)

    பங்களிப்பு ஓய்வூதிய நிதி குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தவறான பரப்புரை செய்கின்றனர். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து அதற்கு ஈடாக 10% தொகையை தனிப் பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது - தமிழக அரசு

    18:16 (IST)

    அரசு ஊழியர்கள் பங்களிப்பு தொகை உள்ளிட்ட விவரத்தை http://cps.tn.gov.in/public/ -ல் காணலாம். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களிலும் நிதி முதலீடு செய்யப்படுகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.