இந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்..! - அமைச்சர் விஜய பாஸ்கர்

இந்தியாவிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதத்தில் தமிழகம் முதலிடம்..! - அமைச்சர் விஜய பாஸ்கர்
பெண் குழந்தைகள்
  • News18
  • Last Updated: January 25, 2020, 3:48 PM IST
  • Share this:
இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக பெண் குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில் பெசண்ட் நகரில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த பேரணியை விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார்.

இதில் 200க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பற்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜய பாஸ்கர் “ நாட்டிலேயே பெண் குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்பது தேசிய அளவிலான சராசரியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 843 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது. இந்த பிறப்பு விகிதத்தை மேலும் அதிகரிக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று சொல்லக்கூடாது என்கிற சட்டம் தமிழகத்தில் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிகளை மீறி செயல்படுவோர் மீதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற நிலைமாறி வீட்டிற்கு பெண் குழந்தை இருந்தால் போதும் என்று எண்ணும் மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது “ எனப் பேசினார்.

  

 

 
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்