தமிழ்நாடு தொழில்துறையில் வேகமாக முன்னேறி வருவதாக முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, தமிழக அரசு கடந்த ஆட்சியை முதலீடுகள் தொடர்பாக காகித கப்பல் என்று குறிப்பிட்டுப் பேசியது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முந்தைய அரசு பத்தாண்டுகளில் செய்யாததை தற்போதைய அரசு 10 மாதங்களில் செய்துள்ளதாக தெரிவித்தார். 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 65 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் போடப்பட்டு உள்ளதாகவும், தொழில்துறை துறை வேகமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.
தொழில் துறையின் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றி வருவதாகவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு என்று பத்திரிக்கைகள் தலையங்கங்களில் பாராட்டு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் படிப்பு... மாணவர்களிடையே ஆர்வம் இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
அமெரிக்கத் தூதரகம் தமிழகத்தின் தொழில்துறையை பாராட்டி உள்ளதாகவும், சட்ட ஒழுங்கு சரியாக இருந்தால் தான் முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்றும், அதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறினார். இவ்வாறு செயல்படும் தொழில் துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.