தமிழகம் பெரியார் மண் அல்ல, ஆழ்வார் மண்- தமிழிசை

news18
Updated: February 13, 2018, 8:08 AM IST
தமிழகம் பெரியார் மண் அல்ல, ஆழ்வார் மண்- தமிழிசை
தமிழிசை சவுந்தரராஜன்
news18
Updated: February 13, 2018, 8:08 AM IST
தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``தமிழகத்தில் நாத்திக ஆட்சியை அகற்றிவிட்டு ஆத்திக ஆட்சியை கொண்டுவருவதே பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் என்றும் தமிழகத்தில் ஆன்மீக அரசியலுக்கு வித்திட்டதே பாரதிய ஜனதா என்றும்’’ தமிழிசை கூறியுள்ளார். மேலும், ``தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண் என்றும் தமிழகத்தில் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்தும் பட்ஜெட் குறித்தும் குறை கூறும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவர் பதவியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்துவிட்டார் என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.மேலும் தனது கட்சிக்கே தலைவர் பொறுப்புக்கு வரமுடியாத ஸ்டாலி எவ்வாறு தமிழகத்தின் முதல்வராக முடியும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...