ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive : ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்கள் ஏற்றத்தை கணக்கிடுவது திராவிட மாடல் - நியூஸ் 18 நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Exclusive : ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்கள் ஏற்றத்தை கணக்கிடுவது திராவிட மாடல் - நியூஸ் 18 நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஒரு காலம் இருந்தது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற CNN News 18 தொலைக்காட்சியின் ‘சென்னை டவுன் ஹால்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

  அப்போது உரையாற்றிய அவர்,  “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றுக்கும் வளர்ச்சிக்கும் தெற்கின் பாடங்கள் அடிப்படையானவை என்பதைத்தான் நாங்கள் இதுவரை சொல்லி வந்தோம். அதனை C.N.N. தொலைக்காட்சியும் - News 18 தொலைக்காட்சியும் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறது. வரலாறு சொல்லும் பாடம் என்பதும் அதுதான்.

  இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பதே தெற்கில் இருந்துதான் முதன்முதலில் தொடங்கியது. இந்தியர்களுக்கு ஓரளவு நிர்வாக சுதந்திரம் தரலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, இரட்டையாட்சி முறை 1920-ஆம் ஆண்டு உருவானது. சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வகுப்பின் அளவுக்கு தகுந்த இடஒதுக்கீடு எனும் சமூகநீதி உரிமையை வழங்கியது தமிழ்நாடு.

  பெண்களுக்கு வாக்குரிமை என்பது 1921-ஆம் ஆண்டே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என முதன்முதலாக சட்டம் போட்டது தமிழ்நாடு. இந்தியாவின் மாநிலங்கள் மொழிவழியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முதலில் சொன்னது தமிழ்நாடு.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யக் காரணமானது தமிழ்நாடு. “சென்னையில் நடந்த போராட்டங்கள் காரணமாகத்தான் இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது” என்று பிரதமர் நேரு  நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்ள். இதன் மூலமாகத்தான் இந்தியாவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இருந்த தடைகள் மொத்தமாக நீக்கப்பட்டது.

  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் ஆணையத்தால் வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து போராடியது திராவிட இயக்கம்.

  பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம், கல்வியை, வேலைவாய்ப்பை, அரசியல் அதிகாரத்தை, நிர்வாகப் பொறுப்புகளை பெற முடியவில்லை. இவற்றைப் பெறுவதற்கான வாசல்தான் சமூகநீதிக் கருத்தியல்.

  ஒருகாலம் இருந்தது, 'வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது' என்று  அண்ணா முழங்கினார். ஆனால் இன்றைக்கு வடக்கை விட, தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது.

  இன்றைக்கு மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயண வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

  • ஒட்டுமொத்தமாக உள்நாட்டு உற்பத்தியில் 2வது இடம்.
  • நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக் குறியீட்டில் 2வது இடம்.
  • உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 51.8% -மாக இருக்கிறது.
  • ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை என்பது
  • 6.8%, தமிழ்நாட்டில் 3.63% தான்.

  • இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம்.
  • இந்திய அளவில் பணவீக்கம் 6.71% ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 4.78% தான்.
  • பட்டினிச் சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
  • வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை 4% மட்டுமே.
  • இந்தியா முழுமைக்கும் இருக்கக்கூடிய தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் இருக்கிறது.
  • தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் இருக்கிறது.
  • தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.
  • இவை அனைத்தும் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி.

   இந்த அடித்தளத்தில்தான் திராவிட மாடல் ஆட்சியானது நடந்து வருகிறது.

   ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்.
   மக்களின் ஏற்றத்தை பார்ப்பது திராவிட மாடல்!

   இறக்குமதியை மட்டும் கணக்கிடுவது வேறு மாடல்.
   இரக்க சிந்தனையோடு திட்டமிடுவது திராவிட மாடல்!

   சில மாநிலங்கள் வளர்ந்தால் போதும் என்று நினைப்பது வேறு மாடல். அனைத்து மாவட்டங்களையும் வளர்க்க நினைப்பது திராவிட மாடல்!

   ஒற்றைச் சிந்தனை கொண்டது வேறு மாடல்.
   பரந்த ஒருமைச் சிந்தனை கொண்டது திராவிட மாடல்!

   ஒற்றுமையில் வேற்றுமை உருவாக்குவது வேறு மாடல்.
   வேற்றுமையில் ஒற்றுமை காண்பது திராவிட மாடல்!

   அதனால்தான் அனைத்து மாநிலங்களிலும் திராவிட மாடல் சிந்தனை பரவ வேண்டும் என்று நினைக்கிறோம்” என கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, News18