Home /News /tamil-nadu /

தற்கொலையில் இரண்டாம் இடத்தில் தமிழகம்.. கூலித்தொழிலாளிகள், மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு!

தற்கொலையில் இரண்டாம் இடத்தில் தமிழகம்.. கூலித்தொழிலாளிகள், மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு!

தற்கொலை

தற்கொலை

இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 18,925 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 11.5 சதவீதம் ஆகும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
2021 ஆண்டிற்கான இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் அறிக்கை (ADSI) மற்றும் இந்தியாவில் குற்றங்களின் அறிக்கை (CII), இரண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால்(NCRB) கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

தன்கொலை எண்ணிக்கை:

2021 ஆண்டிற்கான இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் அறிக்கை படி, இந்தியாவில் மொத்தம் 1,64,033 தற்கொலை  பதிவாகியுள்ளன. அதில்  மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. , இது 2020 இல் 1,53,052 வழக்குகளில் இருந்து 7.2 சதவீதம் அதிகமாகும்.

2021 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 53 முக்கிய நகரங்களில், மொத்தம் 25,891 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்கொலை விகிதம் என்பது  1,00,000 பேருக்கு எதனை பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்று எண்ணிக்கையைக் கணக்கிடும். 2021 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 1,00,000 பேருக்கு 12 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

Jio Mart- WhatsApp: வாட்ஸ்அப் சாட்டில் ஜியோ மார்ட் ஷாப்பிங் செய்வது எப்படி?

தினக்கூலிகளாக ஈடுபடுபவர்கள் தற்கொலையால் ஏற்படும் இறப்புகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து சம்பளம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தற்கொலை விகிதம் என்பது அதிகமாக உள்ளது.

காரணம்:

நாட்டில் தற்கொலைக்கான முக்கிய காரணங்களாக  ஒருவரின் வேலை அல்லது தொழில், தனிமை, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்பங்களில் ஏற்படும் மோதல், மனநோய், குடிப்பழக்கம், நிதி இழப்பு மற்றும் நாள்பட்ட நோய், வலி ஆகியவை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.தற்கொலை எண்ணிக்கைகளில் இரண்டாம் இடத்தில் தமிழகம். கூலித்தொழிலாளிகள், மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு!சென்

முதல் 5 இடங்கள்:

மகாராஷ்டிரியத்தை அடுத்து , தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிராவில் 22,207 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 13.5 சதவீதம் ஆகும்.  

தமிழ்நாடு :

இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 18,925 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 11.5 சதவீதம் ஆகும். 

மூன்றாவது அதிக எண்ணிக்கை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 9.1%, அதாவது 14,965 பேர், மேற்கு வங்கத்தில் 8.2%, அதாவது 13,500 பேர், கர்நாடகாவில் மொத்த எண்ணிக்கையில் 8 % ஆன 13,056 பேர் இறந்துள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் நாசா திட்டம் இறுதி நேரத்தில் நிறுத்தம்.. காரணம் என்ன?

இந்த ஐந்து பெரிய மாநிலங்களும் சேர்ந்து, நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தற்கொலைகளில் 50.4 சதவீத எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. மற்ற 23 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் மீதமுள்ள 49.6 சதவீத தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

உத்திரபிரதேசம்:

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16.9 சதவீதத்தைக் கொண்ட, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், தற்கொலை இறப்புகளில் ஒப்பீட்டளவில் குறைவான சதவீத பங்கைப் பதிவு செய்துள்ளது.

யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட டெல்லியில் அதிக தற்கொலைகள் (2,840) பதிவாகியுள்ளன. புதுச்சேரியில் 504 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

சாலை விபத்து இறப்புகள்:

அதே போல் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளிலும் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2021 இல் மட்டும் சாலை விபத்துகளால் 4,22,659 பேர் இறந்துள்ளனர். இது 2020 இந்த 3,68,000 விட அதிகம்.

தமிழகத்தில் 16,685 பேர் சாலை விபத்தால் இறந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 9.6% ஆகும். முதல் இடத்தில உத்திர பிரதேசமும், மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 10% அதிகரித்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Suicide, Tamilnadu

அடுத்த செய்தி