Breaking News Today: தமிழக மக்களுக்காக அவமானங்களையும், வலியையும் தாங்கிக் கொள்ள தயார் - முதல்வர் உருக்கம்

Latest Tamil News Live Update | இன்றைய (18-04-2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ் உடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | April 18, 2022, 17:31 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  17:46 (IST)

  சென்னை - சேலம் எட்டு வழி சாலையை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்தால், 
  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்க்கும்... தேனியில் தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் சண்முகம் பேட்டி

  17:36 (IST)

  சமயபுரத்தில் நாளை காலை, 6 மணி வரை மட்டுமே நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி

  நாளை சமயபுரம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நாளை (19ம்தேதி) காலை, 6 மணி வரை மட்டுமே அக்னிசட்டி, அலகு, காவடி, பால்குடம் ஆகிய நேர்த்திகடன் செலுத்துபவர்கள் தேரோடும் வீதியில் அனுமதிக்கப்படுவார்கள்– கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

  17:30 (IST)

  சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம்.... தமிழக சமூக நலத் துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

  மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்க கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில்

  உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

  தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000, ரூ.1500 எப்படி போதுமானதாக இருக்கும். அதை விட அந்த தொகையையும் நிறுத்திவிடலாம். என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக, சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவு

  14:52 (IST)

  பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களால் தண்டிக்கப்படலாமா? கல்வி விதிகள் சொல்வது என்ன? படிக்க: கிளிக

  14:13 (IST)

  பள்ளி கல்லூரிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 18 வயது கீழ் உள்ள 300 மாணவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தகவல்..

  14:12 (IST)

  ஆற்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக தந்தையை வெட்டி கொன்ற மகன் 

  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் இஸ்திமா நகர் பகுதியில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தந்தை முகமது இக்பாலை(61) மகன் முகமது இம்ரான்(34) வெட்டிக்கொலை செய்த சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமது இக்பால் சடலத்தை மீட்ட ஆற்காடு நகர போலீசார் முகமது இம்ரானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  14:11 (IST)

  புதுச்சேரி - முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

  புதுச்சேரியை அடுத்த கண்டமங்கலம் பூஞ்சோலைகுப்பம் கத்தி முனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் மிரட்டி 10 பவுன் நகை,48,000 ரூ கொள்ளையடித்து சென்றனர்.மேலும், கலையரசி என்ற பெண்ணை தாக்கி தாலி சங்கிலியை பறித்த கொள்ளையர்கள் வெளியில் சொன்னால் குடும்பத்தையே கொல்வோம் என மிரட்டல் விடுத்து சென்றனர்.

  14:9 (IST)

  போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் விவரங்களை காவலர்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

  கஞ்சா விற்பனை தொடர்பாக நேற்று இரண்டு காவலர்கள் மற்றும் முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

  14:8 (IST)

  கவுகாத்தியில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தேசிய டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது..

  தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

  இந்தநிலையில் ஷில்லாங்கில்  இன்று தொடங்கும்  83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே  டிராய்லர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

  இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் படுகாயாங்கள் விஸ்வா தீனதயாளன் அருகே உள்ள நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  விஷ்வாவுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

  இந்நிலையில் உயிரிழந்த தீனதயாளனின் உடல் இன்று  கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலை கண்ணீர் மல்க அவரது உறவினர்களும்,பெற்றோர்களும் உடலை பெற்றுக்கொண்டு அண்ணாநகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு சென்றனர்

  14:6 (IST)

  கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் - தவறான முறையில் விண்ணப்பித்தால் தண்டனை - மாவட்டஆட்சியர் அறிவிப்பு 

  புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1898 ஆகும். இவர்களது குடும்பத்திற்கு கருணை தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தவறான முறையில் விண்ணப்பித்தவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு படி இறப்பு நிகழ்ந்த 90 நாட்ளுக்குள் விண்ணபிக்க வேண்டும் எனவும் மாவட்டஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார்.