Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளது.. பாஜகவால் இங்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - யஷ்வந்த் சின்ஹா

தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளது.. பாஜகவால் இங்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா - முதல்வர் ஸ்டாலின்

யஷ்வந்த் சின்ஹா - முதல்வர் ஸ்டாலின்

Yashwanth Sinha | தமிழ்நாட்டில் திமுக அரசு வலுவாக உள்ளதால் இங்கு பாஜகவால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    நாட்டில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மூ குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்து யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தனர்.

    குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் ல்வேறு கட்சிகளைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்ட யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வந்தார். சென்னை வந்த யஷ்வந்த சின்ஹாவிற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன்வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாள் முதல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். எப்போதும் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது இல்லை. இப்போது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் முக்கியமானது.

    மகாராஷ்டிரா, ஹரியானா போல் ஏன் தமிழகத்தால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

    மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் இந்த நேரத்தில் நாம் இங்குப் பேசிக் கொண்டு இருக்கிறோம். நல்வாய்ப்பாக தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி உள்ளது. மத்திய அரசு என்ன முயன்றாலும் இங்கு ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. ஆனால், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவர்கள் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    நான் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் இதுப்போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தேவையான அழுத்தம் கொடுப்பேன். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் சிக்கலில் உள்ளது. மாநில அரசுகளுக்கான உரிமை மறுக்கப்படுகிறது. ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்புச் சட்டப்படி இருக்க வேண்டும், ஆளுநரின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin, President Election, Yashwanth Sinha

    அடுத்த செய்தி