முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்” ஆ.ராசா கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்

“தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்” ஆ.ராசா கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ஆ.ராஜா, நிர்மலா சீதாராமன்

ஆ.ராஜா, நிர்மலா சீதாராமன்

பல்வேறு வகைகளில் ரூ.15,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது - ஆ.ராசா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 4,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு வகைகளில் ரூ.15,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டிற்கு நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது. இதனால் மாநிலத்திற்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. எதன் அடிப்படையில் பணம் விடுவிக்கப்படுகிறது?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆடிட் ஜெனரல் சான்றிதழ் அளித்தால் பணம் உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றார். “தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ,4000 கோடியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த தொகை விடுவிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் மாநிலங்களுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

First published:

Tags: A Raja, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Tamilnadu