Home /News /tamil-nadu /

நடிகர் போண்டா மணி சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

நடிகர் போண்டா மணி சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

நடிகர் போண்டா மணியை நலம் விசாரிக்கும் அமைச்சர் மா. சுப்ரமணியன்

நடிகர் போண்டா மணியை நலம் விசாரிக்கும் அமைச்சர் மா. சுப்ரமணியன்

நடிகர் போண்டா மணி தற்போது சிறுநீரக செயலிழப்பு ஆரம்ப நிலையில் உள்ளார். அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உடனே ஏற்படலாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் போண்டா மணியின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது- பரம்பரை சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூபாய் 1,000 உதவித்தொகை ரூபாய் 3000 ஆக ஏற்கனவே அறிவித்தது போல உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை வேண்டி விண்ணப்பித்திருந்த 61 மருத்துவர்களுக்கு முதல்வர் இன்று உதவி தொகை வழங்கினார்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி- காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா மே மாதம் ஆளுநர் அலுவலகத்துக்கு சட்டத்துறை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த ஆளுநர் சித்த மருத்துவர் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையம் சட்ட விதிகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்று கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.



சட்ட வல்லுனர்கள் உடன் ஆலோசனை செய்து கடந்த 17ஆம் தேதி ஆளுநருக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2020 மற்றும் ஹோமியோபதி தேசிய ஆணைய சட்ட பிரிவுகளுக்கும் சித்த மருத்துவ மாணவர் சேர்க்கை முரண்பாடு ஏதுமில்லை என விரிவான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை

நடிகர் போண்டா மணிக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 மாதங்கள் முன்பு அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிறுநீரக செயலிழப்பு ஆரம்ப நிலையில் உள்ளார்.
அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உடனே ஏற்படலாம்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உறவினர்கள் யாரேனும் உள்ளார்களா என விசாரிக்க சொல்லியுள்ளோம். அப்படி இல்லை என்றால் உறுப்பு மாற்றுக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.முதல்வர் அவர் குறித்து விசாரித்தார் என  மா. சுப்ரமணியன் கூறினார்.
Published by:Musthak
First published:

Tags: Ma subramanian

அடுத்த செய்தி