Home /News /tamil-nadu /

அதிவேகத்தில் பரவும் கொரோனா... காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு

அதிவேகத்தில் பரவும் கொரோனா... காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு

இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 62,767 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,547 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 13,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கெரோனா பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில், இன்றைக்கு பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தின பாதிப்பு 10,978 ஆக இருந்தது.

    இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 62,767 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,547 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழகத்தில் காணும் பொங்கல் வரும் 16-ம்தேதி ஞாயிறன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பொது இடங்கள், சுற்றுலாத் தலங்கள், உறவினர்களின் இல்லங்கள் உள்ளிட்டவைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள். இந்நிலையில் காணும் பொங்கல் அன்று தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்தியுள்ளது.

    Alos read:  ஓமைக்ரான் பரவலால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

    ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 31-1-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும். 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க : இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு
    Published by:Musthak
    First published:

    Tags: Lockdown, Tamilnadu government

    அடுத்த செய்தி