முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள்... 50 ஆயிரம் கோடி முதலீடு: 2023 மினவாகனக் கொள்கை வெளியீடு!

1.50 லட்சம் வேலைவாய்ப்புகள்... 50 ஆயிரம் கோடி முதலீடு: 2023 மினவாகனக் கொள்கை வெளியீடு!

முதலவர் ஸ்டாலின்

முதலவர் ஸ்டாலின்

மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை அதிகரித்திடும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2023 தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையை தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதை அதிகரித்திடும் நோக்கிலும், விநியோகம், தேவைகள் மற்றும் சூழல் அமைப்பை நன்கு வலுப்படுத்திடும் வகையிலும் தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 என்ற திருத்திய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மின்வாகன உற்பத்தித்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த மின் வாகனக் கொள்கையின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னேற்ற நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள், பொது மின்கல மாற்றி நிலையங்களுக்கான சலுகைகள், சாலை வரி விலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதிக் கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 2025ஆம் ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மின் வாகன தொழிற்பூங்காக்கள் அமைத்தல், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக  தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழுவை மாற்றி அமைத்து, இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: CM MK Stalin