2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் கரும்பை அரசு வழங்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்கக் கோரி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து ஏன் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்யவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார். கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பை கொடுத்தால் சிறிய முந்திரியாக இருப்பதாகவும்,வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு தொகுப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செங்குகரும்பு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
#தமிழர்களின் தலையாய பண்பாட்டுப் பண்டிகை #பொங்கல்பண்டிகை.
தமிழக அரசு அறிவித்திருக்கும் #பொங்கல்பரிசுத்தொகுப்பு #போதுமானதல்ல.
குறைந்த பட்சம் ரொக்கமாக ரூ. 2,500 மற்றும் #கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும்.#gkvasan #tmc #TNPolitics #TNGovt #TNGovernment #pongalgift pic.twitter.com/6ZWbYFRvTS
— G.K.Vasan (@TMCforTN) December 25, 2022
பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே கோரியிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1000 மற்றுமே அறிவித்த நிலையில், குறைந்தபட்சம், ரூ.2500 ஆவது வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும் கரும்பும் சேர்த்து கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GK Vasan, Pongal Gift, Tamilnadu