ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரு பேருந்தில் 'இவ்வளவு' பயணிகள் மட்டுமே... கட்டண உயர்வு இருக்கிறதா...?

ஒரு பேருந்தில் 'இவ்வளவு' பயணிகள் மட்டுமே... கட்டண உயர்வு இருக்கிறதா...?

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் பரவலான வகையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையி, நாளை மறுதினமான ஜூன் 1 முதல் தமிழகம் முழுவதும் பேருந்து இயக்கம் பரவலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது

குறிப்பாக தொற்று பாதிப்பு குறைவான மாவட்டங்களில் அதிக அளவு பேருந்தும், அதேபோல தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு குறைவான பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் முன்கூட்டியே பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.  இதனையடுத்து சென்னையில் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றன.

அதேபோல விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் தயார் படுத்தக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தொலைதூர பேருந்துகளில் அதிகபட்சமாக 26 நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பயணிகள் பேருந்தில் அனுமதிக்கப்படுவர்.

குறைவான பயணிகளோடு பேருந்தை இயக்குவதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர். இதனால், விரைவில் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் பேருந்து கட்டண உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதை முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Lockdown, TNSTC