மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் அனைத்து வயதினரும் உடற்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள 147 பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பொதுநிறுவனங்கள், தனியார் பங்களிப்பு மற்றும் உள்ளாட்சி நிதியை பயன்படுத்தி பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் உருவாக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.