தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்த திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் வாழ்த்தியுள்ளார். 

 • Share this:
  விநாயகர் சதுர்த்தித் திருநாள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ” விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் மகிழ்ச்சியான இத்தருணத்தில், சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  விநாயகர் அறிவு, வளம் மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றின் திருவுருவாகப் போற்றப்படுகிறார். எந்தவொரு நல்ல வேலையையும் தொடங்குவதற்கு முன்னர், விநாயகரை வணங்குவதும், அவர் பெயரைப் போற்றித் துதிப்பதும் பொதுவான வழக்கமாகும். இதன் மூலம் அனைத்துத் தடைகளும் நீங்கி வெற்றி கிட்டும்.

  ஆளுநர் வாழ்த்து


  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில், நாம் விநாயகரைப் போற்றி வழிபடுவதுடன், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வோம். மக்கள் வருங்காலங்களில் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவர் அருள்புரியட்டும். இத்திருநாள் நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் நல்ல உடல் நலத்தை வாரி வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: