ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது -ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

பாரதியார் திருவுருவப்படத்திற்கு  ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

பாரதியார் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பாரதியார் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது என கூறிய ஆளுநர், ரிஷிகளும் முனிகளும் கவிஞர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சுதந்திர வேட்கையை தன் எழுச்சி கவிதைகள் மூலம் தூண்டிய முண்டாசு கவிஞர் பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் பிறந்த எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ''திராவிட மாடலே தமிழ் இல்லை.. நல்ல பெயரை ஸ்டாலின் கண்டுபிடிக்கணும்'' - ஆளுநர் தமிழிசை கருத்து

இதேபோன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பாரதியார் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுதந்திரத்துக்காக மட்டும் இன்றி, ஒருங்கிணைந்த பாரதத்தை வலியுறுத்தியும் பாரதியார் பாடல்கள் எழுதியதாக தெரிவித்தார். இந்தியா ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவானது என கூறிய ஆளுநர், ரிஷிகளும் முனிகளும் கவிஞர்கள் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Mahakavi Bharathiyar, RN Ravi, Tamil Nadu Governor