ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

பிற சட்ட நிலவரங்கள் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும், ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமது பரிசீலனையில் இருக்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் கேமிங்கை ஒழுங்குபடுத்தவும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் ரூ.5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும். இதுகுறித்த விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கவும், மீறி விளம்பரங்களை வெளியிடும் நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

  சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

  இதையும் படிங்க: கோவையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் ஒத்திவைப்பு : சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

  இந்த நிலையில் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மறுத்துள்ள ஆளுநர், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை என்று கூறியுள்ளார். தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், மசோதாவின் அம்சங்கள், பிற சட்ட நிலவரங்கள் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும், ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமது பரிசீலனையில் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Online rummy, RN Ravi, Tamil Nadu Governor