அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5%  இட ஒதுக்கீடு.. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  • Share this:
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பல்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி 45 நாள்கள் ஆன நிலையில், நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டிருந்ததாகவும், அவரின் பதில் கடிதம் நேற்று கிடைத்ததன் காரணமாக, இன்று ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதித்து வருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது’’ என்றார்.


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த மாதம் 15ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு அமலாகும்பட்சத்தில், 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading