ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கு, செப்டம்பர் 26-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

  ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. ஒரு பெண் உட்பட 29 பேர் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

  இதை எதிர்த்து, ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தடை சட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் 10-ம் தேதி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார். ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோரும் குழுவில் இடம்பெற்றனர்.

  இதையடுத்து, ஜூன் 27-ம் தேதி கே.சந்துரு தலைமையிலான குழு, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதே நாளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வது, ஒழுங்குபடுத்துவது தொடர்பான கருத்துக்களை பகிரலாம் என்று மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

  Also Read: இந்து சமய அறநிலைத்துறையின் பெயரை மாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை..!

  இதைத்தொடர்ந்து, குழுவின் அறிக்கை மற்றும் மக்களின் கருத்துகள் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கு, செப்டம்பர் 26-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதால், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

  ஆனால், தற்போது இயற்றப்படவுள்ள சட்டமானது, மக்களின் கருத்து, ஆய்வுக் குழுவின் அறிக்கை ஆகியவை மூலம் இயற்றப்படவுள்ளது. குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், ஆடுபவர்களின் பணத்தை எப்படியெல்லாம் மோசடி செய்கிறது என்பதை குழுவின் அறிக்கை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது.

  அதேபோல, டம்மி பிளேயர்கள் (players) எவ்வாறு ஊடுருவுகிறார்கள், அதன் அல்காரிதம் (Algorithm) என முழுமையாக ஆராய்ந்து சட்டம் இயற்றப்படவுள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு மக்கள் எப்படி அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது. எனவே, இந்த முறை இயற்றப்படும் சட்டத்தை யாராலும் தகர்க்க முடியாது. அதேபோல, அபராத அம்சங்களும் இடம்பெறும்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Online rummy, RN Ravi