தக்காளி விலை கடுமையாக உயர்ந்து காணப்படும் நிலையில், தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஐ கடந்து விற்பனை ஆகி வருகிறது. ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். துக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெகு விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பில், பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி இலவசம்...வைரலாகும் அறிவிப்பு!
பொதுமக்களுக்கு குறைவான விலையில் தக்காளியை விற்பனை செய்ய நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் அனைத்து காய்கறிகளுடன் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தக்காளி விலையை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் விளக்கம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.